காஞ்சிபுரம் - காஞ்சிபுரத்தின் முக்கிய பகுதிகளில், கேமராக்கள், ஒலிபெருக்கி வைத்து, போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது.கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பின், ஊரடங்கில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் இயங்குகிறது.இதனால், காஞ்சிபுரம் நகரில், பழையபடி, காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், காஞ்சி புரம் நகரின் முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிலையம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், கங்கை கொண்டான் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், காவல் துறை சார்பில், 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த இடத்தில், ஒலிபெருக்கியும் வைக்கப்பட்டு உள்ளது.இவற்றின் மூலம், மேற்கண்ட இடங்களின் நிலவரம் குறித்து, எஸ்.பி., அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.மேலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, 'சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்' என, போலீசார் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE