சென்னை; மயிலாப்பூரில், பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடக்க உள்ளது.
சென்னை, மயிலாப்பூரில், 'தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' சார்பில், 19 ஆண்டுகளாக, பாரம்பரிய புராதன கார் மற்றும் பைக்குகள் கண்காட்சி நடத்தப்படுகிறது.பழைய கார்களை பாதுகாத்து, பராமரித்து, புதுப்பித்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவது, இதன் நோக்கமாகும்.இந்தாண்டின் கண்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில், 'சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ டிஸ்பிளேய் - 2021' என்ற பெயரில் காலை, 10:00 முதல்- 2:00 மணி வரை நடக்கிறது.
இதில், 50க்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க கார்கள், 25க்கும் மேற்பட்ட பழமையான, இரு சக்கர வாகனங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.மேலும், கண்காட்சியின் சிறப்பம்சமாக, 1886ம் ஆண்டு, 'பென்ஸ்' மற்றும் 1896ம் ஆண்டு, 'போர்டு' நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட, நன்கு ஓடும் நிலையில் உள்ள, இரண்டு கார்கள் இடம் பெறுகின்றன.அனுமதி இலவசம் என, அச்சங்கத்தின் செயலர் குகன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE