பொது செய்தி

தமிழ்நாடு

இணைந்த திரை பிரபலங்கள்!

Added : ஜன 07, 2021
Share
Advertisement
தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள், இன்றைய இளம்தலைமுறைக்கு, மறு அறிமுகம் செய்யும் முயற்சி, கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல் முயற்சியாக, திருப்பாவையின் முதல் பாசுரத்தை, ரவிவர்மாவின் ஓவியங்களுடன் தொடர்புபடுத்தி, தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கினர். இந்தாண்டு, தொழில்ரீதியான பாடகர்கள் அல்லாத, எட்டு நடிகையர் அவர்களின் சொந்த

தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள், இன்றைய இளம்தலைமுறைக்கு, மறு அறிமுகம் செய்யும் முயற்சி, கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முதல் முயற்சியாக, திருப்பாவையின் முதல் பாசுரத்தை, ரவிவர்மாவின் ஓவியங்களுடன் தொடர்புபடுத்தி, தென்னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கினர். இந்தாண்டு, தொழில்ரீதியான பாடகர்கள் அல்லாத, எட்டு நடிகையர் அவர்களின் சொந்த குரலில், மார்கழி திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியுள்ளனர்.அவர்கள், உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ, சுஹாசினி ஆகியோர் குரலுடன், ஷோபனாவின் அபிநயம், பாடலுக்கு மணிமகுடமாக அமைந்துள்ளது. பாடலை, பலரும் மொபைல் போனிலே, பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை, சுபஸ்ரீ தணிகாசலம் தொகுத்துள்ளார்.இது குறித்து, சுஹாசினி கூறுகையில், ''இந்தாண்டு மட்டுமல்லாமல், அடுத்தாண்டும் மார்கழி மாதம் ஒரு பாசுரத்துடன் அனைவரையும் மகிழ்விப்பதே எங்கள் நோக்கம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X