ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல்

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேளச்சேரியில், இரு தாலுகா எல்லையில், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கிய இடத்தை, மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடையே, தண்டவாளம் குறுக்கே, 80 அடி அகலத்தில் நீர்வழி பாதை உள்ளது. மழைக்காலங்களில், வேளச்சேரி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழை நீர், நீர்வழிப்பாதை வழியாக, சதுப்பு நிலத்தை

வேளச்சேரியில், இரு தாலுகா எல்லையில், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கிய இடத்தை, மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடையே, தண்டவாளம் குறுக்கே, 80 அடி அகலத்தில் நீர்வழி பாதை உள்ளது. மழைக்காலங்களில், வேளச்சேரி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழை நீர், நீர்வழிப்பாதை வழியாக, சதுப்பு நிலத்தை அடையும்.நீர்வழிப்பாதை அருகில் உள்ள, கால்வாய் மற்றும் அதை ஒட்டிய நீர்த்தேக்க பகுதியை, சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டினர். மொத்தம், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் இருந்தது.இது குறித்து, 2018ல், நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தி அடிப்படையில், உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்காக எடுத்தது.இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடங்கள் அளக்கப்பட்டன. பள்ளிக்கரணை கிராமம் சர்வே எண் 658/1ஏ-ல், 210 ஏக்கர் இடம் உள்ளது. அதில், 98 ஏக்கர் இடம், வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள, 112 ஏக்கர் இடத்தில், 10 ஏக்கருக்கு மேல், ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.மொத்த இடமும், சோழிங்கநல்லுார் தாலுகாவில் உள்ளது. 10 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடத்தில், சிலருக்கு, சென்னை மாவட்டம், வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, பட்டா வழங்கியதும், அதன் அடிப்படையில், கட்டடம் கட்ட, மாநகராட்சி அனுமதி வழங்கியது தெரிய வந்தது.நீதிமன்ற உத்தரவையடுத்து, 2018 செப்டம்பரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, அக்., 10ம் தேதி, வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டது. அதில் இருந்த, 24 கட்டடங்கள் அகற்றப்பட்டன.மீட்கப்பட்ட இடம் குறித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வருவாய்த்துறை, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதாக கூறி உள்ளது. ஆனால், மீதமுள்ள இடத்தை மீட்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மீட்கப்பட்ட இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து, வருவாய்த்துறை வைத்த, 'சீல்' உடைக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி வழங்கிய நோட்டீசை கிழித்து எறிந்து, மீண்டும், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டுமான பணி துவங்கியது.இது குறித்தும், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, 2020 நவம்பரில், இரண்டு கட்டடம் இடிக்கப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடம், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லுார் தாலுகாவில் வருவதாக, வருவாய்த்துறை கூறுகிறது. இரு தாலுகா எல்லையை அளக்க வேண்டிய பொறுப்பு, மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் தான்.இதற்காக, சோழிங்கநல்லுார் தாலுகாவில் இருந்து, பல கடிதம் எழுதியும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.அரசியல்வாதிகள் அழுத்தம் அதிகரிப்பதால், ஆக்கிரமிப்பை முழுமையாக எடுக்க முடியவில்லை. எப்போது, கை வைத்தாலும், பல இடையூறுகள் வருகின்றன. இடம், இரு தாலுகாவில் வருவதால், எல்லையை அளந்து, வேலி அமைத்தால் தான், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக, மாவட்ட நிர்வாகத்திற்கு, பல கடிதம் எழுதிவிட்டோம். உயர் அதிகாரிகள் தான், முடிவு எடுக்க வேண்டும்.வருவாய்த் துறை அதிகாரிகள்திசை திருப்பும் அரசியல்வாதிகள்!வேளச்சேரி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:வேளச்சேரியில் உள்ள அரசு இடங்களை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் ஆக்கிரமிக்கின்றனர். மேடையில், இரு துருவமாக பேசினாலும், ஆக்கிரமிப்பில் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவ்வப்போது, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றால், சில அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் எங்களை, 'போட்டு' கொடுக்கின்றனர்.அவர்கள், எங்களுக்கு பல வழிகளில் மிரட்டல் விடுக்கின்றனர். வீட்டு பெண்கள் வரை மிரட்டுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படும் வருவாய்த்துறை, இடத்தில் எல்லை பிரச்னை இருப்பதாக, பிரச்னையை திசை திருப்பு கின்றனர். மாவட்ட ஆட்சியர், கிண்டி கோட்டாட்சியர் நேரடியாக தலையிட்டால் தான், அரசு இடத்தை மீட்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
-- நமது நிருபர்- -.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
07-ஜன-202116:25:42 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj அனைத்து இடங்களிலும் ஆங்காங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை இது போல ஏன் வெளிப்படுத்துவதில்லை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட்ங்களில் குறிப்பாக நகரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பட்டா கொடுத்துள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X