பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
சென்னை மாவட்டத்தில், தேர்தலில் பணிபுரிய உள்ள, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல், தயாராகி வருகிறது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன. தேர்தல் கமிஷனும், தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை துவங்கி உள்ளன.அந்த வகையில், சென்னை மாவட்டத்தில், தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள்

சென்னை மாவட்டத்தில், தேர்தலில் பணிபுரிய உள்ள, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல், தயாராகி வருகிறது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன. தேர்தல் கமிஷனும், தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை துவங்கி உள்ளன.அந்த வகையில், சென்னை மாவட்டத்தில், தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், 16 சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும், தேர்தல் பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.தற்போது, கொரோனா பரவல், கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த மையங்களில் பணிபுரிய, மாநகராட்சி, வருவாய்த்துறை, ரயில்வே, பள்ளி கல்வித்துறை உட்பட, அனைத்து துறைகளில் இருந்து, 35 ஆயிரம் அலுவலர்கள் நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.இதில், முதற்கட்டமாக, 15 ஆயிரம் அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அலுவலர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.பலருக்கு கூடுதல் பொறுப்பு, பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.இவர்கள் தவிர்த்து, தாலுகா அதிகாரிகளும், அவர்களுக்குட்பட்ட தொகுதிகளில், தேர்தல் பணிகளில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X