பள்ளிக்கரணை - தொடர் கன மழை காரணமாக, பள்ளிக்கரணை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியதால், பல நகர்களில், உபரி நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நகரில், நேற்று முன்தினமும் நேற்றும் கன மழை பெய்தது. ஏற்கனவே, வடகிழக்கு பருவ மழை மற்றும் 'நிவர், புரெவி' புயல்கள் காரணமாக பெய்த தொடர் மழையால், சென்னை புறநகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின.இந்நிலையில், நேற்று முன்தினம், கொட்டி தீர்த்த கன மழைக்கு, பள்ளிக்கரணை, அணை ஏரி, நன்மங்கலம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, நாராயணபுரம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, புழுதிவாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி, உபரி நீர் வெளியேறி சுற்று வட்டார நகர்களில், வெள்ளம் புகுந்தது.குறிப்பாக, இதனால், மடிப்பாக்கம், ராம் நகர், சதாசிவ நகர், பள்ளிக்கரணை, டெல்லி பாபுநகர், ராஜேஷ் நகர், சாய் பாலாஜி நகர், சுண்ணாம்புக் கொளத்துார், அண்ணாநகர், மேடவாக்கம் சிவகாமிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்புக்குள்ளாகின.மழைநீர் வடிய சென்னை, மாநகராட்சி, ஊராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கண்காணிப்பு தீவிரம்படப்பை பாசனப்பிரிவு எல்லையில், பரங்கிமலை, குன்றத்துார் ஒன்றியங்களில், 86 ஏரிகள் உள்ளன. இதில், டிசம்பரில் பெய்த மழையில், பல ஏரிகள் நிரம்பின. இந்நிலையில், இரு நாட்களாக, தொடர்ந்து பெய்து வரும் கன மழையில், அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. இதையடுத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள், அனைத்து ஏரிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE