கோட்டூர்புரம் - வியாபாரியின் வீட்டில், 15 சவரன் நகை, மொபைல் போன் உள்ளிட்டவற்றை திருடிய, முன்னாள் ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கோட்டூர்புரம், பீலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகர், 28; காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர், தன் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கோட்டூர்புரம், யாதவா தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார்.அங்கு, அவரது லாக்கரில் வைத்திருந்த, 15 சவரன் நகை, மொபைல் போன் சில தினங்களுக்கு முன் மாயமானது. இதை அறிந்த மனோகர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், துாத்துக்குடியைச் சேர்ந்த சதிஷ்குமார், 28, என்ற முன்னாள் ஊழியர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, நேற்று அவரை கைது செய்த போலீசார், 15 கிராம் நகை, மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட சதிஷ் குமார் மீது, துாத்துக்குடியில், இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE