பல்லாவரம் - பல்லாவரத்தில், பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், போலீசார் மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.பல்லாவரம் மின் வாரிய அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிஹரன், 38. கடந்த, 1ம் தேதி, மல்லிகா நகரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக, ஊழியர்களுடன் சென்றார்.அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர், தகராறு செய்து, ஹரிஹரனை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில், நித்யானந்தம் தாக்கியபோது, உடன் இருந்த நவீன், 30, மணிகண்டன், 24, ஸ்டாலின், 34, ஆகியோரை, நேற்று பிடித்த பல்லாவரம் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். நித்யானந்தம் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யக்கோரி, மின் வாரிய அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நித்யானந்தத்தின் தந்தை ஏழுமலை, 62, என்பவரை, காவல் நிலையத்திற்கு வருமாறு, போலீசார் கூறியுள்ளனர்.அதன்படி, நேற்று மாலை, ஏழுமலை, பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, அவர், திடீரென, வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்தார்.இதையடுத்து, அவரை, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், ஏழுமலை மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது. அவரது உறவினர்கள், ஏழுமலையின் உடலை வாங்கி சென்றனர். இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE