சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
தரமணி - மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், பெரு, 34, பிங்க், 22. இவர்கள், கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள, புராணி டூல்ஸ் சென்டர் என்ற கடையில் பணி புரிந்தனர்.நேற்று முன்தினம் பெய்த மழையில், கடை அருகே தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று, மோட்டார் கொண்டு தண்ணீரை இறைக்கும் பணியில், இருவரும்

தரமணி - மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், பெரு, 34, பிங்க், 22. இவர்கள், கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள, புராணி டூல்ஸ் சென்டர் என்ற கடையில் பணி புரிந்தனர்.நேற்று முன்தினம் பெய்த மழையில், கடை அருகே தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று, மோட்டார் கொண்டு தண்ணீரை இறைக்கும் பணியில், இருவரும் ஈடுபட்டனர்.அப்போது, மோட்டார் சுவிட்ச் போடும்போது, பிங்க் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற, பெரு மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும், துாக்கி வீசப்பட்டு மயங்கினர்.அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர்.தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X