எண்ணுார் ; ரேஷன் ஊழியர் வீட்டில் வைத்திருந்த, ௫ லட்சம் ரூபாய் பொங்கல் பரிசு பணத்தை திருட வந்தவர்கள், வீடு மாறி சென்றதால், ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை, எர்ணாவூர், காந்தி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48; மின் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், வீட்டின் கதவை மூடி, படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, கேட்டை தாண்டி உள்ளே வந்த மர்ம நபர்கள், உள்கதவின் மேல் தாழை, துளை வழியாக கையிட்டு திறந்தனர். பின், கதவை திறந்து உள்ளே நுழைந்தவர்கள், அங்குமிங்கும் நோட்டமிட்டுள்ளனர்.சத்தம் கேட்கவே, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் முழித்துக் கொண்டனர். சுதாரித்த கொள்ளையர்கள், கையில் வைத்திருந்த அரிவாளை, அங்கேயே விட்டு தப்பியோடினர்.இது குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவுசெய்து, கொள்ளையர்கள் தவற விட்ட, அரிவாளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி, வீட்டின் மேல் மாடியில், நியாய விலைக் கடை ஊழியர் ஒருவர் வசிக்கிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பணம் வழங்க, வங்கியிலிருந்து, ௫ லட்சம் ரூபாய் பணத்தை, எடுத்து வந்துள்ளார்.அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. வீடு மாறியதால், பணம் தப்பியதாக கூறப்படுகிறது.இதே போல், எர்ணாவூர் மார்க்கெட் பகுதியில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த, இரண்டு இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளில், மர்ம நபர்கள் சர்வ சாதாரணமாக, இரு சக்கர வாகனங்களை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE