சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மெரினா - படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள், ஐந்து பேரை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்தர பாபு, சன்மானம் வழங்கினார்.திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுமுகம், 55, ஜெயசீலன், 36, மதன், 35, மகேந்திரன், 45, முருகன், 50, ஆகிய, ஐந்து பேரும், நேற்று முன்தினம், பைபர் படகில் கடலுக்கு சென்றனர். நேற்று காலை கரைக்கு திரும்பியபோது, படகு

மெரினா - படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள், ஐந்து பேரை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்தர பாபு, சன்மானம் வழங்கினார்.திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுமுகம், 55, ஜெயசீலன், 36, மதன், 35, மகேந்திரன், 45, முருகன், 50, ஆகிய, ஐந்து பேரும், நேற்று முன்தினம், பைபர் படகில் கடலுக்கு சென்றனர். நேற்று காலை கரைக்கு திரும்பியபோது, படகு இன்ஜினில் வலை ஒன்று சிக்கியதால், படகு கவிழ்ந்து, அனைவரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.கரையிலிருந்து, 200 மீட்டர் துாரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, மெரினா தீயணைப்பு படையினர் மீட்டனர். பின் அவர்களுக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.சிறப்பாக செயல்பட்டு, மீனவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்களை, தீயணைப்பு துறை இயக்குனர் வெகுவாக பாராட்டியது மட்டுமல்லாமல், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X