போலீஸ் டைரி.....

Added : ஜன 07, 2021
Share
Advertisement
7 கிலோ கஞ்சா பறிமுதல்ராஜமங்கலம்: கொளத்துார், நேர்மை நகர் சுடுகாடு அருகே, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களை பிடித்து சோதனையிட்டபோது, 7 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக, பொன்னியம்மன்மேடைச் சேர்ந்த மதன்குமார், 29, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசோக், 37, உள்ளிட்ட ஐந்து பேரை, ராஜமங்கலம் போலீசார்

7 கிலோ கஞ்சா பறிமுதல்ராஜமங்கலம்: கொளத்துார், நேர்மை நகர் சுடுகாடு அருகே, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களை பிடித்து சோதனையிட்டபோது, 7 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக, பொன்னியம்மன்மேடைச் சேர்ந்த மதன்குமார், 29, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அசோக், 37, உள்ளிட்ட ஐந்து பேரை, ராஜமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். 2,700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.'கம்மல்' ஆட்டை போட்ட பெண்கள்திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுனில், 22. இவர், அதே பகுதியில், தன் தந்தையின் நகைக் கடையுடன் இணைந்த அடகுக்கடையை நடத்தி வருகிறார். டிச., 30ம் தேதி, சுனில் கடையில் இருந்தபோது, இரண்டு பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். பின், 'நகைகள் வேண்டாம்' என, அங்கிருந்து சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுனில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது, ஒரு பெண் நகை வாங்குவதுபோல் கவனத்தை திசை திருப்பி, மற்றொரு பெண் நகையை மறைத்து எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. 6 கிராம் தங்க கம்மல்களை அந்தப் பெண்கள் திருடி தப்பியுள்ளனர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.திருநங்கையர் கைதுகண்ணகி நகர்: கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பு, 55வது பிளாக்கில், திருநங்கையர் குடியிருக்கின்றனர். இவர்களில் சிலர், தினமும் நாவலுார் சென்று, கடைகளில் பணம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இரு கோஷ்டிகளாக செயல்பட்ட இவர்களுக்கு, தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த, 4ம் தேதி, நாவலுாரில் தகராறு நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கண்ணகி நகர் குடியிருப்பில் வைத்து, ஒருவரை ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணி, 40, மைதிலி, 32, சுஜி, 26, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விசாரித்த கண்ணகி நகர் போலீசார், நேற்று, இரு தரப்பைச் சேர்ந்த, ஐந்து பேரை கைது செய்தனர். பிணை மீறியவருக்கு 202 நாள் சிறைபுதுவண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் விச்சு என்ற சைலேஷ்குமார், 27. கடந்த, ஜூலையில் கைது செய்யப்பட்டு, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், நன்னடத்தை பிணையில், எச்சரித்து அனுப்பட்டார். இந்நிலையில், ஜன., 6ல், நண்பர்களுடன் சேர்ந்து, வ.உ.சி., நகரைச் சேர்ந்த நவீன்குமார், 20, என்பவரை, இரும்பு கம்பியால் தாக்கிய வழக்கில் போலீசிடம் சிக்கினார். இதையடுத்து, 202 நாட்கள் சிறை தண்டனையுடன் நேற்று மதியம், சிறையில் அடைக்கப்பட்டார்.வீட்டின் பூட்டை உடைத்து திருட்டுசென்னை: வியாசர்பாடி, சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 53. மழைன் காரணமாக, இவரது வீட்டின் கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால், குடும்பத்தாருடன், இந்த வீட்டை பூட்டி, மேல் தளத்தில் உள்ள, வீட்டிற்கு சென்றனர். நேற்று முன்தினம் காலை பார்த்தபோது, பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த, 3 சவரன் நகைகள், வெள்ளிக்கொலுசு மற்றும் மூன்று 'லேப்டாப்' உள்ளிட்டவற்றை, மர்மநபர்கள் திருடி செல்வது தெரியவந்தது. இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X