வன்முறைக்கு 4 பேர் பலி; அமெரிக்காவில் பதட்டம்

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்த போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். வன்முறையிலும் 3 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ
TrumpSupporters, US_Capitol, ClashWithPolice, Women_Dead, Violence, டிரம்ப், ஆதரவாளர்கள், அமெரிக்கா, கேபிட்டல், துப்பாக்கிச்சூ, வன்முறை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்த போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். வன்முறையிலும் 3 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற்று, வெற்றிபெற்றார். தோல்வியை ஒப்புக் கொள்ள அதிபர் மறுத்து வருகிறார். ஜோ பைடன் ஜனவரி 20ல் அதிபராக பதவி ஏற்கவேண்டும்; அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதலை வழங்கவிருந்த நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் இறந்தார். வாஷிங்டனில் பதற்றம் நிலவுகிறது. அமைதி காக்கும்படி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பைட் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையால், பைடனின் வெற்றிக்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்குவது தற்காலிகமாக தடைபட்டுள்ளது.


கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.


latest tamil news


Advertisement


அதேநேரத்தில் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர். எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பைடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார்.
இதை தடுக்கும் விதமாக கேபிட்டல் கட்டடத்திற்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்ததால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எம்பிக்கள், துணை அதிபர் மைக் பென்ஸ் என அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.


வன்முறை மேலும் அதிகரித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும், வன்முறையில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த வன்முறையால், பல அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news
டிரம்ப் கணக்கு முடக்கம்latest tamil newsதேர்தல் மற்றும் வன்முறை தொடர்பாக ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்த பின்னர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது. மேலும் அவர் தனது விதிமுறைகளை மீறும் 3 டுவீட்களை நீக்காவிட்டால் நிரந்தரமாக முடக்கப்படும் என சமூக வலைதளமான டுவிட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், பேஸ்புக் நிறுவனம் 12 மணிநேரமும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் 24 மணிநேரமும் டிரம்ப் கணக்கை முடக்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayyo paavam - chennai,இந்தியா
07-ஜன-202122:55:04 IST Report Abuse
ayyo paavam முதிர்ந்த ஜனநாயகம் ஊருக்கெல்லாம் வழிகாட்டி தனி நபர் சுதந்திரத்திற்கு முகவுரை எழுதிய நாடு உலகத்திலேயே மிக பணக்கார நாடு பெரியண்ணன் வம்படி பஞ்சாயத்து தலைவன் இப்படி பல பெயர்களை கொண்ட அமெரிக்காவில் நடந்த நிகழ்வு, உலகமே காறித்துப்பும் வகையில் அரங்கேறியுள்ளது இனிமேலாவது இங்குள்ள அடிவருடிகள், எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்ட மாட்டார்கள் என்று நம்புவோமாக பதவி என்பது ஒரு மதுவைக்காட்டிலும் போதையான பொருள். அதற்கு அமெரிக்காவானாலும் ஆப்பிரிக்காவானாலும் எல்லாம் ஒன்றுதான். நம் நாட்டிலும் இதை பின் தொடர்ந்து விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
07-ஜன-202121:44:07 IST Report Abuse
SaiBaba திருமங்கலம் பார்முலா மாதிரி இந்து ஒரு புது போர்முலான்னு எல்லாரும் ஆரம்பிச்சிடப்போறாங்க. தவறுதலான முன்னுதாரணமாகிவிடக்கூடாது.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
07-ஜன-202121:42:29 IST Report Abuse
SaiBaba வெள்ளை மாளிகையை இவ்வளவு லட்சணமாக பார்த்ததே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X