பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு பணியாளருக்கு சமையல் போட்டி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, பவானி பகுதிகளில் உள்ள, பள்ளிகளில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான, சமையல் போட்டி ஈரோடு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொத்தம், 100க்கும் மேற்பட்ட சமையலர், சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன் சிறப்பாளராக பங்கேற்றார். அடுப்பு இல்லாமலும்,

ஈரோடு: ஈரோடு, பவானி பகுதிகளில் உள்ள, பள்ளிகளில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான, சமையல் போட்டி ஈரோடு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மொத்தம், 100க்கும் மேற்பட்ட சமையலர், சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன் சிறப்பாளராக பங்கேற்றார். அடுப்பு இல்லாமலும், எண்ணெய் இல்லாமலும் சிறுதானியங்களை வைத்து, சமையல் செய்யப்பட்டது. எள் உருண்டை, கூழ், முளை கட்டிய பயிறு உள்பட, பல்வேறு சத்தான உணவுகளை சமையலர்கள் செய்திருந்தனர். நடுவர்களாக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், (சத்துணவு திட்டம்), உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, நாமலட்சுமி செயல்பட்டனர். மதரசா துவக்க பள்ளி சமையல் உதவியாளர் சுந்தரி முதல் இடம் பிடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X