தமிழ்நாடு

உண்மை பேசினால் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு: ஸ்டாலினுக்கு முதல்வர் யோசனை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோபிசெட்டிபாளையம்: ''உண்மை பேசினால், எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கோபி, அ.தி.மு.க.,வின் கோட்டை. அ.தி.மு.க., ஆட்சியில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைவருக்கும்

கோபிசெட்டிபாளையம்: ''உண்மை பேசினால், எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கோபி, அ.தி.மு.க.,வின் கோட்டை. அ.தி.மு.க., ஆட்சியில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அ.தி.மு.க., தொண்டன் பதவிக்காக ஆசைப்பட மாட்டான். பதவி தானாக வரும். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் தான் முதல்வர். ஸ்டாலின் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டை நிரூபித்து காட்ட வேண்டும் என, சவால் விடுகிறேன். தி.மு.க.,வினர் உண்மையை பேசினால், எதிர்க் கட்சியில் அமரும் வாய்ப்பாவது ஸ்டாலினுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* நம்பியூரில் முதல்வர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப்பின், அ.தி.மு.க., சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தலாகும். மக்கள் தேவையை அறிந்து, ஒவ்வொரு திட்டமும் வகுக்கப்படுகிறது. நான்காண்டில் சிறப்பான, வெற்றிகரமான ஆட்சியை வழங்கியுள்ளோம். இந்த ஆட்சியில் தவறுகள் நடக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X