ஈரோடு: திருச்சி-பாலக்காடு டவுன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இயங்க துவங்கியது.
திருச்சி-பாலக்காடு இடையே, விரைவு பாசஞ்சர் ரயில், இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டது. கொரோனாவால் மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை இயக்க வேண்டும் என, பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தினமும் இயங்கும் வகையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, நேற்று மதியம் திருச்சியில் இருந்து, பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் அனைத்தும் முன்பதிவு பெட்டிகள். பொது பெட்டிகள் இல்லை. இதே போல், மறு மார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து, திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று காலை, 6:55 மணிக்கு கிளம்புகிறது. திருச்சி கோட்டை, பெட்டவாய்த்தலை, குளித்தலை, சித்தலவாய், கரூர், புகலூர், கொடுமுடி, பாசூர், ஈரோடு, ஈங்கூர், ஊத்துககுளி, திருப்பூர், சோமனூர், பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையார், கஞ்சிகோடு, வழியாக பாலக்காடு செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE