சேலம்: மார்கழி தேய்பிறை அஷ்டமியையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவருக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. அஷ்ட பைரவர்களுக்கும், தனித்தனியாக சிறப்பு பூஜை நடந்தது. ஐவகை எண்ணெயால், பக்தர்கள் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. பின், மஹா தீபாராதனை நடந்தது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட, 16 வகை பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, வடை, செவ்வரளி பூ மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், தரிசனம் செய்தனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன், கை.புதூர் ராஜகணபதி, சென்னகிரி வட்டமலை காலனி மருந்தீசர், வாழப்பாடி காசிவிஸ்வநாதர் கோவில்களில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE