சேலம்: சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இதர கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2020 நவ., 21, 22ல், எழுத்துத்தேர்வு நடந்தது. அதன் முடிவு, டிச., 23ல், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி பெற்றவர்களுக்கு, நேர்காணல் முறையே, வரும், 19, 20ல், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும், 21ல், இதர கூட்டுறவு நிறுவன உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும், 'நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையம், 516, கடலூர் பிரதான சாலை, காமராஜ் நகர் காலனி, அம்மாபேட்டை, சேலம்' என்ற முகவரியில் நடக்க உள்ளது. நேர்காணல் அழைப்பு கடிதத்தை, http://www.slmdrb.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபரம் பெற, 0427 - 2415158 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE