சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் - இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, மகளிரணி செயல்வீரர், வீராங்கனை ஆலோசனை கூட்டம், இன்று காலை, 9:00 மணிக்கு, சுமங்கலி திருமண மண்டபத்திலும், மாலை, 4:00 மணிக்கு, ஜெயக்குமார் திருமண மண்டபத்திலும் நடக்கிறது. அமைப்பு செயலர் பொன்னையன், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் பரமசிவம், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ராஜ் சத்யன், மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாசலம், மாணவரணி செயலர் சக்திவேல் பங்கேற்கின்றனர். இதில், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலர்கள், இளைஞர் - இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், வார்டு செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE