பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய செய்தனர். அவர்கள், பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய செய்தனர். அவர்கள், பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.


கல்லுக்குறிக்கியில்: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு காலபைரவருக்கு, யாகங்கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, காலபைரவர் உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X