பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. ஓசூரிலுள்ள, புனித ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் ஏஞ்சலா மேரி தலைமை வகித்தார். ஓசூர் மாநகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்

ஓசூர்: ஓசூரில், பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. ஓசூரிலுள்ள, புனித ஜான் போஸ்கோ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் ஏஞ்சலா மேரி தலைமை வகித்தார். ஓசூர் மாநகர, அ.தி.மு.க., செயலாளர் நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர், கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பா, 297 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் மற்றும் நல உதவிகள் குறித்து, விளக்கி கூறப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் மதன், ஓசூர் மாநகர அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் தவமணி, நிர்வாகி பவானி சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுதேவன் தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X