கிருஷ்ணகிரி: ''மாற்றத்துக்கான முன்னோடியாக மக்கள் இருக்க வேண்டும்,'' என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று, பகல், 11:00 மணிக்கு பிரசாரம் மேற்கொண்ட அவர், மக்களிடையே பேசியதாவது: மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மக்கள் மாற்றத்துக்கான முன்னோடியாக இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு கணினி வழங்குவோம். இதனால், மக்களுக்கும், அரசுக்குமான உறவு வலுக்கும். இடைத்தரகர்கள் காணாமல் போய்விடுவார்கள். மக்களின் தேவைகள், உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது, நல்ல அரசின் கடமை. எங்களுக்கு இளைஞர்களும், பெண்களும் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். கொள்ளையர்களின் பிடியில், ஆட்சி சென்றுவிடக் கூடாது. புதிய வாக்காளர்கள் நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE