குளித்தலை: ஆர்.டி.,மலையில், ஜல்லிக் கட்டு நடக்கும் இடத்தை தாசில்தார் ஆய்வு செய்தார். பொங்கலையொட்டி, வரும், 16ல் குளித்தலை அடுத்த, ஆர்.டி.,மலையில் விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோவில் முன், 59வது ஆண்டாக, ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு, விழா கமிட்டி நிர்வாகிகள், கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தனர். நேற்று, தாசில்தார் முரளிதரன், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, வாடிவாசல், காளைகள் வரும் பாதை, மாடுபிடி வீரர்களுக்கான இடம், பார்வையாளர்களுக்கான இடம், தடுப்பு வேலி, மருத்துவ சேவை, பரிசு வழங்குவோர் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் வரைபடம் மூலம் ஆய்வு செய்தார். பின்னர், 'மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், தன்னார்வலர்கள், போலீசார், விழா கமிட்டியாளர்கள், பரிசு வழங்குபவர்கள் உள்பட அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்' என, தாசில்தாரிடம், விழா கமிட்டியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். வருவாய் துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE