குளித்தலை: குளித்தலை வருவாய் வட்டத்தில் நங்கவரம், தோகைமலை மற்றும் குளித்தலை குறுவட்ட வருவாய் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள் மற்றும் வருவாய் துறையின் மூலம் உதவி தொகைபெறும் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று, குளித்தலை தாலுகா அலுவலகத்தில் இருந்து மூன்று குறுவட்ட வருவாய் கிராமங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. அவர்கள், பொது மக்களுக்கு வழங்க, வாகனம் மூலம் ஏற்றிச் சென்றனர். இதேபோல் கடவூர் தாலுகா பகுதிக்கும், வேட்டி, சேலைகள் அனுப்பப்பட்டன.
குளித்தலை தாசில்தார் முரளிதரன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையொட்டி, 46 ஆயிரத்து, 473 வேட்டி, சேலைகள்; சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு,7,506 பேருக்கு வேட்டி, சேலை வழங்க, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மூலம், மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE