கரூர்: 'மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில், இன்று, நாளை கலை நிகழ்ச்சி நடத்தப்படும்' என, கரூர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும், பலவிதமான உதவி திட்டங்கள், உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் கலை நிகழ்ச்சிகள், தெருமுனை நாடகங்கள், இன்று, நாளை நடத்தப்படவுள்ளது. இன்று காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டு, காலை, 11:00 மணி முதல், 12:00 மணி; கரூர் பஸ் ஸ்டாண்ட், மதியம், 1:00- 2:00 மணி; குளித்தலை பஸ் ஸ்டாண்ட், மாலை, 3:00- 4:00 மணி; தரகம்பட்டி பஸ் ஸ்டாண்ட், நாளை காலை, 10:00- 11:00 மணி; பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் காலை, 11:00 -12:00 மணி; சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்டில், மாலை, 3:00 - 4:00 மணி வரை நடக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE