குமாரபாளையம்: குமாரபாளையம், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியை கவுசல்யா மணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மேகலா தேவி முகாமை துவக்கி வைத்தார். இதுகுறித்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகேஸ்வரி கூறியதாவது: பள்ளி மேம்பாட்டு திட்டம், சமூக தணிக்கை, பள்ளி சுகாதாரம், பாலின சமத்துவம், பேரிடர் மேலாண்மை, கல்வியில் புதுமை, தர கண்காணிப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில், உறுப்பினர்கள், 20 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 2021-2022 கல்வியாண்டிற்கான செயல்பாடுகளை புதுமையான முறையில் செயல்படுத்துதல், அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மேம்படுத்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்குதல், உடல் நலம், மன நலம், தலைமைப்பண்பு வளர்த்தல் ஆகிய பயிற்சிகள் மேற்கொள்ளுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் இருந்தால், தலைமை ஆசிரியர், வட்டார வள மைய அலுவலர்கள் அல்லது வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE