நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரம் வினியோகம் செய்து துவக்கி வைத்தார். அதில், 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண், திருநங்கைகள் அனைவருக்கும் ஓட்டுப்போட உரிமை உண்டு. ஓட்டுப்போடுவது நம் ஜனநாயக கடமை. இந்த கடமையை தவறாது நாம் செய்வோம். ஓட்டுப்போடுவது, இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கி உள்ள மிகப்பெரிய உரிமை. ஓட்டுப்போட்டு, நமது கடமையை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்போம். கட்டாயம் ஓட்டுப்போடுவோம், நமது உரிமையை நிலைநாட்டுவோம். ஒவ்வொரு ஓட்டும், நம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி. மக்களாட்சியில், நம் பங்களிப்பை உறுதி செய்வோம். மக்களுக்காக, மக்கள் மூலம், மக்களுடைய ஆட்சி என்ற ஜனநாயக மான்பினை கட்டிக்காப்போம். நமது ஓட்டு, நமது முன்னேற்றம், நமது உரிமை. இவ்வாறு அதில் அச்சிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ., தங்கம், உதவி பேராசிரியர்கள் மாதவன், பன்னீர்செல்வம், இணைப்பேராசிரியர் குமரவேல், போலீசார், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE