தமிழ்நாடு

ஸ்டாலின் முதலில் தன் கட்சியை காப்பாற்றி கொள்ளட்டும்: பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி சாடல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
அந்தியூர்: ''ஸ்டாலின் முதலில், தன் கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும். ஏனெனில், மதுரையில் இருந்து அவரது சகோதரர் புறப்பட்டுவிட்டார். ஒரு வீட்டில், ஒரு தாய்க்கு பிறந்த சகோதரருக்குள் ரத்தப்பாசம் கொஞ்சம் கூட இல்லை. குடும்பத்தையே கவனிக்க முடியாத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடந்த தேர்தல் பிரசார

அந்தியூர்: ''ஸ்டாலின் முதலில், தன் கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும். ஏனெனில், மதுரையில் இருந்து அவரது சகோதரர் புறப்பட்டுவிட்டார். ஒரு வீட்டில், ஒரு தாய்க்கு பிறந்த சகோதரருக்குள் ரத்தப்பாசம் கொஞ்சம் கூட இல்லை. குடும்பத்தையே கவனிக்க முடியாத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., அரசு எதை கொண்டு வந்தாலும் குறை சொல்பவர் ஸ்டாலின். யார் தப்பு செய்தாலும், சட்ட வழியில் நடவடிக்கை எடுப்போம். சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. அ.தி.மு.க., எங்கே ஊழல் செய்தது. எந்த இடத்திற்கு அழைத்தாலும், தி.மு.க.,வுடன் விவாதிக்க தயார். அ.தி.மு.க.,வை உடைப்பேன் என கூறும் ஸ்டாலின், முதலில், தி.மு.க.,வை காப்பாற்றட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* கோபி அருகே கள்ளிப்பட்டியில், முதல்வர் பேசியதாவது: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 2.50 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்க கூடுதலாக, 70 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான, நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் மருத்துவராகும் கனவு, இந்த ஆட்சியில்தான் நினைவாகி உள்ளது. தீய சக்தியான, தி.மு.க.,வை புறக்கணிப்போம். தி.மு.க., அராஜக கட்சி. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது. நாட்டை பட்டா போட்டு விற்று விடுவார்கள். மக்களை ஏமாற்றி கடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. மக்களை எவ்வாறு ஏமாற்றி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வினருக்கு நன்கு தெரியும். வாரிசு அரசியலை முறியடிக்க, தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* கோபி தொகுதி, டி.ஜி.புதூர் நால்ரோட்டில், முதல்வர் பேசியதாவது: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில், 102 கி.மீ., வாய்க்கால் கான்கிரீட் தளமாக அமைக்க, 147 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு இந்த அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை, 47 சதவீதமாக இருந்து, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த, 2011க்கு முன், தி.மு.க., ஆட்சியில் கடும் மின் வெட்டு இருந்தது. தற்போது, மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசை குறை கூறி, கவர்னரிடம் ஸ்டாலின் மனு வழங்கி உள்ளார். எங்கள் ஆட்சியில் எந்த குறையும், முறைகேடும் இல்லை என்பதால், இதை பற்றி கவலைப்படவில்லை. அ.தி.மு.க., இரண்டாக உடைந்து போவதாக, ஸ்டாலின் கூறுகிறார். அடுத்த வீட்டை நோட்டம் பார்ப்பதே, ஸ்டாலினுக்கு வேலையாக போய்விட்டது. ஸ்டாலின் முதலில், தன் கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும். ஏனெனில், மதுரையில் இருந்து அவரது சகோதரர் புறப்பட்டுவிட்டார். ஒரு வீட்டில், ஒரு தாய்க்கு பிறந்த சகோதரருக்குள் ரத்தப்பாசம் கொஞ்சம் கூட இல்லை. குடும்பத்தையே கவனிக்க முடியாத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார் என, சிந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X