திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார போக்குரவத்து அலுவலக இடைத்தரகர்கள் மூன்று பேரிடமிருந்து, 51 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு லஞ்சம் வாங்குவதாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், டி.எஸ்.பி.,ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் குழுவினர், நேற்று இரவு, 7:00 மணியளவில், வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து மறைந்திருந்து கண்காணித்தனர். தொடர்ந்து, அருகிலுள்ள தனியார் புகை பரிசோதனை நிலையம் முன், இடைத்தரகர்கள் செந்தில்குமார், 22, சந்தானம், 26, ஈஸ்வரமூர்த்தி, 23, ஆகியோரிடமிருந்து, 51 ஆயிரத்து, 300 ரூபாய் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலக ஆவணங்கள், ஆர்.டி.ஓ., கையெழுத்திட்ட விண்ணப்பங்கள், 20க்கும் மேற்பட்ட ஒரிஜனல் லைசென்ஸ்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், 39, மற்றும் இடைத்தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமார், 2004 முதல், 2013 வரை, இதே இடத்தில் புகை பரிசோதனை நிலையம் நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE