பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் எதிரொலி: நாமக்கல்லில் 45 கண்காணிப்பு குழு அமைப்பு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 45 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கோழிப்பண்ணைகள் கண்காணிக்கப்படுகின்றன,'' என, கலெக்டர் மெகராஜ் கூறினார்.பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பின்னர் கலெக்டர் மெகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில், அதிவிரைவு, 45 கண்காணிப்பு

நாமக்கல்: ''கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 45 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கோழிப்பண்ணைகள் கண்காணிக்கப்படுகின்றன,'' என, கலெக்டர் மெகராஜ் கூறினார்.


பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பின்னர் கலெக்டர் மெகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில், அதிவிரைவு, 45 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் என, குழுவுக்கு, இரண்டு பேர் உள்ளனர். இங்கு, 1,500க்குள் மேற்பட்ட கோழிப்பண்ணைகளை, அவர்கள் தினமும் ஆய்வு செய்ய உள்ளனர். ஏற்கனவே ஆய்வு செய்து வந்த போதிலும், தற்போது கேரளாவுக்கு, இரண்டு கோடி முட்டைகள், தினமும் செல்கின்றன. முட்டை வாகனங்கள் திரும்பி வரும்போது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும். ஒரு நாள் வைத்திருந்து, அதற்கு பின் பயன்படுத்த வேண்டும் என, கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. தினசரி அனைத்து பணிகளிலும், கோழிகளுக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டும். பண்ணைகளில் இறந்து போகும் கோழிகளை கண்காணிக்க வேண்டும். எண்ணிக்கை அதிகமாக இருந்தால், உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், பறவைகள் மூலம் பறவை காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதா என்பதை வனத்துறை குழுவினர் மூலம் கண்காணிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில், பறவைக்காய்ச்சல் தாக்க வாய்ப்பில்லை. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். வழக்கம்போல், முட்டை, கோழி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பண்ணையாளர்கள், இதுகுறித்த விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொன்னுவேல் உள்பட, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X