பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன்'

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: ''தமிழக அரசியலில், திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசினார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில், நேற்று மதியம், 1:30 மணிக்கு, அவர் பிரசாரம் செய்து பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தல் ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர். இதில், யார் ஜெயித்தால் என்றில்லாமல், நேர்மையின் பக்கம் நின்று, மக்கள் நீதி மையத்தை,

திருப்பத்தூர்: ''தமிழக அரசியலில், திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசினார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில், நேற்று மதியம், 1:30 மணிக்கு, அவர் பிரசாரம் செய்து பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தல் ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர். இதில், யார் ஜெயித்தால் என்றில்லாமல், நேர்மையின் பக்கம் நின்று, மக்கள் நீதி மையத்தை, மக்கள் ஆதரிக்க வேண்டும். இத்தேர்தல், அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. அதற்கு கருவியாக நான் இருப்பேன். வழிநடத்த வேண்டியது மக்களாகிய நீங்கள்தான். மற்ற கட்சிகளை போல, நாம் வாக்குறுதி அளிக்கவில்லை. வாக்குறுதி கேட்க வந்துள்ளேன். என்னிடம் கூடும் கூட்டம், பிரியாணிக்கு வரவில்லை. நேர்மையான தமிழகம் வேண்டும் என்பதற்காக வந்துள்ளது. மக்களாகிய நீங்கள், ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் நீதி மையத்தில் சேர வேண்டும். நீங்களும் சேர்ந்து, தேரை இழுத்தால் தான், நாளை நமதாக்க முடியும். மக்கள் நீதி மையம் மூன்றாவது குழந்தையாக, ஊன்றும் குழந்தையாக வளர்ந்து வருகிறது. என் மீது இருக்கும் அன்பை, கட்சியில் இணைந்து தொண்டு செய்ய வேண்டும். மக்களின் பலத்தை பயன்படுத்தி, நேர்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும். அதுதான் மக்கள் நீதி மையத்தின் குறிக்கோள். மக்கள் நீதி மையம் நேர்மையான ஆட்சியை அளிக்க, மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X