காதல் ஆயுதம், லவ் ஜிஹாத்!: மதமாற்றத்துக்கான மாற்றுவழி: கோவையில் பெண்கள் மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காதல் ஆயுதம், 'லவ் ஜிஹாத்!': மதமாற்றத்துக்கான மாற்றுவழி: கோவையில் பெண்கள் மீட்பு

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (131)
Share
அந்த வாலிபரின் வசீகரிக்கும் பேச்சு, நுனிநாக்கு ஆங்கிலம், பகட்டான ஆடை, ரேபான் கண்ணாடி அணிந்த தோற்றம் அந்தப் பெண்ணை மயக்கியது. ஆடம்பரமான மோட்டார் வாகனம், அவள் உள்ளத்தை கொள்ளை கொண்டது. காதல் கண்ணை மறைத்தது. படிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது.ஆனால், அந்த வாலிபர், ஒரு அன்றாட கூலித் தொழிலாளியின் மகன் என்பதை உணர, அவளுக்கு வெகு நாட்களாயின. அப்படியானால், இந்த ஆடம்பர
காதல் ஆயுதம், லவ் ஜிஹா, மதமாற்றம், மாற்றுவழி,  கோவை, பெண்கள் மீட்பு

அந்த வாலிபரின் வசீகரிக்கும் பேச்சு, நுனிநாக்கு ஆங்கிலம், பகட்டான ஆடை, ரேபான் கண்ணாடி அணிந்த தோற்றம் அந்தப் பெண்ணை மயக்கியது. ஆடம்பரமான மோட்டார் வாகனம், அவள் உள்ளத்தை கொள்ளை கொண்டது. காதல் கண்ணை மறைத்தது. படிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், அந்த வாலிபர், ஒரு அன்றாட கூலித் தொழிலாளியின் மகன் என்பதை உணர, அவளுக்கு வெகு நாட்களாயின. அப்படியானால், இந்த ஆடம்பர பொருட்களுக்கும், கை நிறைய பணமும் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்?அவளது பெற்றோர், அந்த நரக வாழ்க்கையில் இருந்து மகளை மீட்கத் தட்டாத கதவுகள் இல்லை. இறுதியில், இத்தகைய பெண்களைக் காப்பாற்றி திருப்பிக் கொண்டுவர முயற்சிக்கும், ஒரு ஹிந்து அமைப்பு உதவியுடன் மகளைக் காப்பாற்றியுள்ளனர், அந்த பெற்றோர்.

''எம்மதமும் சம்மதம் என்று பேசும் பலரும், மதவெறி பிடித்தவர்களாகவே இருக்கின்றனர். பிறரை மதம் மாற்ற பல வழிகளைக் கடைபிடிக்கின்றனர். அதில், ஒன்றுதான் இந்த 'லவ் ஜிஹாத்,'' என்கிறார், கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் சிவலிங்கம்.


latest tamil news''பெண்களை காதல் வயப்படுத்தி, அவர்களது மொத்தக் குடும்பத்தையும் மதம் மாறச் செய்வதே, 'லவ் ஜிஹாத்' லட்சியம். ஒவ்வொரு கல்லுாரியிலும், 'லவ் ஜிஹாத்' செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் கோவையில் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். 80 சதவீதப்பெண்களுக்கு மறுமணமும் செய்யப்பட்டுள்ளது,'' என்கிறார் சிவலிங்கம்.


மணமான பெண்களும் இலக்கு


'லவ் ஜிஹாத்' கல்யாணமான பெண்களையும் விட்டு வைப்பதில்லை. இதற்காக அமர்த்தப்படும் வாலிபர்கள், பொதுவாக ஆடம்பரமான ஜவுளிக்கடை அல்லது மொபைல் போன் 'ரீசார்ஜ்' செய்யும் கடை வைத்திருப்பர். ஏனெனில், அங்குதான் பெண்கள் அடிக்கடி வந்து செல்வர்.மெதுவாக அவர்களிடம் உரையாடலைத் தொடங்குவர். 'மிஸ்டு கால்' கொடுத்தல், ராங்க் நம்பர் என்று கூறி பேச்சை வளர்ப்பது இவர்களது வழிமுறைகள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை, இவர்களது வேலையை மிக சுலபமாக்கி விட்டன.


'தாவா' பயிற்சி மையங்கள்


பெண்கள் இவர்களது வலைக்குள் சிக்கிவிட்டனர் என்று தெரிந்தவுடன், அவர்களுக்கு பயிற்சி அளிக்க மூன்று மாதம், 'தாவா' மையத்துக்கு அழைத்துச் செல்வர். சென்னை, கோவை, துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் கீழக்கரையில் இதுபோன்ற மையங்கள் அமைந்துள்ளன. பெண்கள் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்திருக்கக் கட்டாயப் படுத்தப்படுவர்.

இரவு 11:00 மணிவரை மத போதனை நடத்தப்படும். அடுத்தபடியாக திருமணம் முடிந்துவிட்டால் பெண்ணின் பெற்றோரை மதம் மாற வற்புறுத்துவர். இல்லையெனில், அந்தப்பெண் அவர்களுடைய தொடர்பை முறித்துக்கொள்ளவேண்டும். பெற்றோரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளக்கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜமாத்தில் இருந்து வளர்ப்பு தாய், தந்தையரை ஏற்படுத்திக்கொடுப்பர். இது போன்று பெற்றோர்களுடன் தொடர்பு இழந்த பல பெண்கள் உள்ளனர். சிலரை தீவிர மூளைச் சலவை செய்து சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைப்பர்.


குடும்பத்தை குலைத்த சிநேகிதன்


கோவையை சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் கதை மிகுந்த சோகமானது. அவர் தன் குழந்தையுடன் திருநெல்வேலியில் இருந்து ரயிலில் பயணம் செய்யும்போது, ஒரு இளைஞனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கோவை வந்தவுடன் அழைத்துச்செல்ல வந்த கணவனுடன் வீடு சென்றுள்ளாள். மறுநாள் கணவனிடம், குழந்தையை விட்டு விட்டு வேலைக்குச் சென்றவள், அந்த ரயில் சிநேகிதனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள்.


நரகமானது வாழ்க்கை


கிணத்துக்கடவில் வசிக்கும் ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணால் அவள் பெற்றோருக்கு ஏற்பட்ட கதி துரதிஷ்டவசமானது. தனது கல்லுாரிக்கு, 'நண்பனின் நண்பன்' என்று கூறிகொண்டு, அடிக்கடி வந்த வாலிபரால் ஈர்க்கப்பட்டு ஓடிச்சென்று, திருமணம் செய்து கொண்டுள்ளாள். இதையறிந்த அவளது பெற்றோர், மகளது திருமணத்தை அங்கீகரிக்க முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பெற்றோரை இழந்ததுடன் வாழ்க்கையும் நரகமாகியது. அப்பெண்ணை மீட்டு மறுமணம் செய்து வைத்தனர், ஹிந்து அமைப்பினர்.


காதலன் நிரபராதி

பெண்கள், 18 வயது உடையவர்களாக இருந்தால் பெற்றோர் முறையீடு, நீதிமன்றத்தில் எடுபடுவதில்லை. கோவையில் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மீட்க, 40 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'இவ்வழக்குகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலும் பெண்களின் தரப்பு நியாயத்தை நிரூபிக்க முடிவதில்லை. பெண்கள் தங்கள் காதலை வாட்ஸ் ஆப், சாட் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பர். சிக்கலான தருணத்தில் உதவும் என்பதால், அவற்றை இளைஞர்கள் பாதுகாத்து வைத்திருப்பர். ஆனால், பெண்களோ, மற்றவர்களிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் ஆதாரங்களை அழித்து விடுவர். பெண்களே அவர்களை உருகி உருகிக் காதலித்ததாகவும், தாங்கள் குற்றமற்றவர்களாகவும், ஆண்கள் சட்டத்தின் முன் நிரூபித்து விடுவர்' என்றார்.


'நற்பெயருக்கு களங்கம்'

'லவ் ஜிஹாத்' குறித்து விளக்கமளிக்கக் கோரி, 'பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தனர். 'இது போன்ற எந்த சம்பவங்களும் இந்தியாவில் நடந்ததில்லை. எங்கள் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் இதுபோல் குற்றம் சாட்டப்படுகின்றன. இஸ்லாமிய - இந்து சகோதரர்களின் நல்லிணக்கத்தை உடைக்கும் நோக்கத்துடனே இந்து அமைப்புக்கள் செயல்படுகின்றன' என்றனர்.
-நமது நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X