விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்ய மத்திய அரசு விருப்பம்: சிவசேனா

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மும்பை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும், இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லைகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில்
CentralGovt, DoingPolitics, FarmersProtest, ShivSena, மத்திய அரசு, விவசாயிகள் போராட்டம், அரசியல், சிவசேனா

மும்பை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும், இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லைகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் விவசாயிகளுடன் 7 கட்டங்களாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. நாளை (ஜன.,8) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடுமைாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சாம்னாவில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


டில்லியில் உறையும் குளிரில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இதுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட 50 விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப பெறாமல் விவசாயிகளும் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற தயாராக இல்லை. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்பதால், பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம்.


latest tamil news


விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும், இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. குளிர், மழையால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கியிருக்கும் குடில்களில் மழைநீர் புகுந்து அவர்களின் உடைகள், படுக்கைகள் நனைத்துவிட்டன. இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும். உடனடியாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
07-ஜன-202122:34:04 IST Report Abuse
MANIAN K உதவாக்கரே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-ஜன-202120:52:08 IST Report Abuse
sankaseshan 50 பேர் தியாகம் செய்த்திருக்கிறார்கள் கொழுப்பெடு டுத்து உயிரைவிட்டால் அது தியாக மா ? செத்துருப்பது பணக்கார விவசாயிகள் இல்லை . சிவசேனா ஒரு ரௌடிபார்ட்டி .
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
07-ஜன-202118:59:53 IST Report Abuse
visu சீக்கியர்களை தவிர வேறு யாரையும் காண முடியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X