மோசடி சாமியாருடன் தொடர்பா? ராதிகா குமாரசாமி மறுப்பு| Dinamalar

மோசடி சாமியாருடன் தொடர்பா? ராதிகா குமாரசாமி மறுப்பு

Added : ஜன 07, 2021
Share
பெங்களூரு :பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் பெயரில், மோசடி செய்து கைதாகி, சிறையில் உள்ள யுவராஜ் என்ற சாமியார் வழக்கில், நடிகை ராதிகா குமாரசாமி பெயர் அடிபடுகிறது.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பெயரில், தொழிலதிபர்களை அறிமுகம் செய்து கொண்ட சாமியார் ஒருவர், கோடிக்கணக்கில் மோசடி செய்தார். தற்போது

பெங்களூரு :பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் பெயரில், மோசடி செய்து கைதாகி, சிறையில் உள்ள யுவராஜ் என்ற சாமியார் வழக்கில், நடிகை ராதிகா குமாரசாமி பெயர் அடிபடுகிறது.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பெயரில், தொழிலதிபர்களை அறிமுகம் செய்து கொண்ட சாமியார் ஒருவர், கோடிக்கணக்கில் மோசடி செய்தார். தற்போது கைதாகி சிறையில் உள்ளார்.இவரின் சொத்துகள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, யுவராஜ் கணக்கிலிருந்து, நடிகையும், திரைப்பட தயாரிப்பாளருமான ராதிகா குமாரசாமி கணக்குக்கு, 1.25 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்திருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.ராதிகா குமாரசாமி, ம.ஜ.த., தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் இரண்டாவது மனைவி.

இது தொடர்பாக, பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள, தன் வீட்டில் ராதிகா, நேற்று கூறியதாவது:எங்கள் குடும்பத்துக்கும், சாமியார் குடும்பத்துக்கும், 17 ஆண்டு தொடர்புள்ளது. என் தந்தையின் இறப்பு பற்றி, யுவராஜ் கூறிய ஆரூடம் பலித்த பின், எங்கள் குடும்பத்துடன், மேலும் நெருக்கமானார்.அவரது மனைவி பெயரில், புரொடக் ஷன் ஹவுஸ் உள்ளது. வரலாற்று திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக, அவர் என்னுடன் ஆலோசித்தார்.

அடுத்தாண்டு என் கால்ஷீட் வேண்டுமென கேட்ட சாமி, என் கணக்குக்கு, 15 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்திருந்தார். இந்த ஆவணம் என்னிடம் உள்ளது.இந்த படத்தை, சாமியாரில் மாமா தயாரிக்க திட்டமிட்டிருந்தார். சாமியார் எனக்கு 1.25 கோடி ரூபாய் கொடுத்தார் என்பது, வெறும் வதந்தி. என் சகோதரன் கணக்கிலும், அவர் பணம் செலுத்தவில்லை.அந்த சாமியாருடன், திரைப்படம் தயாரிப்பது தவிர, வேறெந்த தொடர்பும் எனக்கில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X