பொது செய்தி

இந்தியா

நினைவு மண்டபம் : எடியூரப்பா அடிக்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பீதர் : பசவண்ணர் பிறந்த பீதர் மாவட்டம், பசவகல்யாணில், 500 கோடி ரூபாய் செலவில் புதிய நினைவு மண்டபம் கட்டுவதற்கு, முதல்வர் எடியூரப்பா, நேற்று, அடிக்கல் நாட்டினார்.பீதர் மாவட்டம், பசவகல்யாணில், பசவண்ணர் பிறந்த இடத்தில், 500 கோடி ரூபாய் செலவில் புதிய நினைவு மண்டபம் கட்டுவதற்கு, மாநில அரசு முடிவு செய்தது.இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று நடந்தது. முதல்வர்

பீதர் : பசவண்ணர் பிறந்த பீதர் மாவட்டம், பசவகல்யாணில், 500 கோடி ரூபாய் செலவில் புதிய நினைவு மண்டபம் கட்டுவதற்கு, முதல்வர் எடியூரப்பா, நேற்று, அடிக்கல் நாட்டினார்.

பீதர் மாவட்டம், பசவகல்யாணில், பசவண்ணர் பிறந்த இடத்தில், 500 கோடி ரூபாய் செலவில் புதிய நினைவு மண்டபம் கட்டுவதற்கு, மாநில அரசு முடிவு செய்தது.இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று நடந்தது. முதல்வர் எடியூரப்பா, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையில் பங்கேற்றார்.

பின், விழாவில் அவர் பேசியதாவது:கர்நாடக வரலாற்றில், இன்றைய தினம் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். ஆன்மிக மையமாக திகழும் பசவகல்யாணில், 12ம் நுாற்றாண்டில் உலகின் முதல், பார்லிமென்ட் அனுபவ மண்டபம் நிறுவப்பட்டது.தற்போது லோக்சபா முறை இயங்குவதற்கு, பசவண்ணரின் பணியே மூல காரணமாகும். பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நடந்த புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கான பூமி பூஜை நடத்திய போது, பசவண்ணரை நினைவு கூறியதை கன்னடர்களான நமக்கு பெருமை.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த புதிய மண்டபம் அழகான முறையில் கட்டப்படும். அப்போது, மூன்று, நான்கு லட்சம் மக்கள் முன்னிலையில், மோடியை வரவழைத்து அவரது கைகளால் திறந்து வைக்கப்படும்.குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிக்கும் பொறுப்பு, சேடம் எம்.எல்.ஏ., பசவராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்துள்ளேன். முதல் கட்டமாக, 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள் பணிகள் ஆரம்பிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X