'லவ் ஜிஹாத் தடை சட்டம்அமலுக்கு வருவது உறுதி'

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பெங்களூரு: "லவ் ஜிஹாத் தடை சட்டம், அமலுக்கு வருவது உறுதி. இவ்விஷயத்தில், பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை, " என, ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரு விகாஸ் சவுதாவில், துறை அபிவிருத்தி தொடர்பான புத்தகத்தை, அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல், நேற்று வெளியிட்டார்.பின் அவர் கூறியதாவது:லவ் ஜிஹாத் தடை சட்டம், அதிக

பெங்களூரு: "லவ் ஜிஹாத் தடை சட்டம், அமலுக்கு வருவது உறுதி. இவ்விஷயத்தில், பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை, " என, ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரு விகாஸ் சவுதாவில், துறை அபிவிருத்தி தொடர்பான புத்தகத்தை, அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல், நேற்று வெளியிட்டார்.பின் அவர் கூறியதாவது:லவ் ஜிஹாத் தடை சட்டம், அதிக விரிவான விஷயம். இச்சட்டம் தற்போது, சட்டத்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதை ஆய்வு செய்து, சமுதாய தலைவர்களுடன் ஆலோசிக்கப்படும். அதன்பின் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.லவ் ஜிஹாத் தடை சட்டம், அமலுக்கு வருவது உறுதி. இவ்விஷயத்தில், பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.விரைவில் அமைச்சரவை விரிவுப்படுத்தப்படும். முதல்வர் எடியூரப்பா, கொடுத்த வாக்குறுதிப்படி, எங்களின் நண்பர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X