பல்லாரி:காதிகனுர் கிராமத்தில், ஒரே குடும்பத்தில், நால்வர் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், காதிகனுர் கிராமத்தில் வசிப்பவர் நஞ்சுண்டேஸ்வரா, 32. இவரது மனைவி பார்வதி, 27. இத்தம்பதியருக்கு, கவுதமி, 3, என்ற மகளும், ஸ்வரூப், 27, என்ற மகனும் உள்ளனர்.தனியார் நிறுவன ஊழியரான நஞ்சுண்டேஸ்வரா, பல இடங்களில், அதிகமாக கடன் வாங்கினார். அதை அடைக்க முடியாமல் திண்டாடினார். கடன் கொடுத்தவர்கள், நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மனம் நொந்த தம்பதி, நேற்று காலை குழந்தைகளுக்கு, விஷம் கொடுத்து, கொன்று விட்டு, தாங்களும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.காதிகனுர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE