பொது செய்தி

இந்தியா

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மங்களூரு: ''போதைப்பொருள் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலானது. நாட்டின் கட்டமைப்பை அரிக்கும் கரையான்கள் போன்றவர்கள். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும்,'' என, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர், சஷி குமார் எச்சரித்தார்.மங்களூரில் நடந்த போதை பொருள் விற்றவர்கள் பரேடை, நகர போலீஸ் கமிஷனர் சசி குமார், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஒவ்வொரு குற்றவாளியின்

மங்களூரு: ''போதைப்பொருள் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலானது. நாட்டின் கட்டமைப்பை அரிக்கும் கரையான்கள் போன்றவர்கள். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும்,'' என, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர், சஷி குமார் எச்சரித்தார்.

மங்களூரில் நடந்த போதை பொருள் விற்றவர்கள் பரேடை, நகர போலீஸ் கமிஷனர் சசி குமார், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஒவ்வொரு குற்றவாளியின் வழக்கு விபரங்கள், தற்போது செய்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின் அவர் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவின்படி, வெளியே வந்த குற்றவாளிகள், ரவுடிகள் அமைதியாக நடந்து கொள்கின்றனரா என்று ஆய்வு செய்யவும், பழைய தொழிலை விட்டு, சமுதாயத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ளவும் இங்கு வரவழைக்கப்பட்டனர்.நகரில் கல்லுாரி மாணவர்களுக்கு, போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, போதை பொருள் விற்பனை செய்பவர்களின் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகளிலும், 'ரெய்டு' நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, போதை பொருட்களை, 'டார்க் வெப்' இணையதளம் மூலமும், கூரியர் மூலமும் விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற செயலிலிருந்து விடுபட்டு, சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை வாழ விரும்பினால், அவர்களின் வழக்குகளை மூட, காவல் துறை ஆலோசிக்கும்.கேரள மாநிலத்தை ஒட்டி, மங்களூரு அமைந்துள்ளது. அத்துடன், இங்கு பல கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. கடலோரம் அமைந்துள்ளதால், போதை பொருள் கடத்தவும் வசதியாக உள்ளது.நகரின், 15 காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள் முக்கியமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள், சமுதாயத்திற்கு அச்சுறுத்தலானது. நாட்டின் கட்டமைப்பை அரிக்கும் கரையான்கள் போன்றதாகும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X