கர்நாடகாவிலும் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப விரைவில் அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவிலும் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப விரைவில் அனுமதி

Added : ஜன 07, 2021
Share
பெங்களூரு: திரையரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப, கர்நாடக அரசு விரைவில் அனுமதியளிக்க உள்ளது.நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின், திரையரங்குகள், மாதக்கணக்கில் மூடப்பட்டதன ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், படிப்படியாக வர்த்தக நடவடிக்கைகள் துவங்கின; திரையரங்குகளும் திறக்கப்பட்டன. ஆனால் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் நிரப்ப, வாய்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே

பெங்களூரு: திரையரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப, கர்நாடக அரசு விரைவில் அனுமதியளிக்க உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின், திரையரங்குகள், மாதக்கணக்கில் மூடப்பட்டதன ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், படிப்படியாக வர்த்தக நடவடிக்கைகள் துவங்கின; திரையரங்குகளும் திறக்கப்பட்டன. ஆனால் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் நிரப்ப, வாய்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே கோடிக்கணக்கில், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப, அனுமதி அளிக்கும்படி, திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர்.

சமீபத்தில் தமிழக அரசு, இதற்கு வாய்ப்பளித்துள்ளது.அதே போல, கர்நாடகாவிலும் திரையரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப வாய்ப்பளிக்கும்படி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர், முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். முதல்வரும் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, முடிவு செய்வதாக நம்பிக்கை அளித்தார்.

திரைப்பட வர்த்தக சபை தலைவர் ஜெய்ராஜ் கூறியதாவது:விரைவில் திரை அரங்குகளில், 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப, மாநில அரசு உத்தரவிட உள்ளது. மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திரையரங்கங்கள் பொருளாதார நஷ்டத்தில் சிக்கின.கன்னட திரையுலகம், நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனவே அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். முதல்வர் அனுமதியளிப்பார் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X