பெங்களூரு: பொங்கல் பண்டிகைக்கு பின், எந்த நேரத்திலும் அமைச்சரவை விஸ்தரிக்கவோ, மாற்றி அமைக்கப்படவோ வாய்ப்புள்ளதால், அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ளவர்கள், முதல்வர் எடியூரப்பா வீட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அமைச்சரவையில், ஏழு இடங்கள் காலியாக உள்ளன; இந்த இடங்களை கைப்பற்ற பலர் போட்டியிடுகின்றனர். இதனால், அமைச்சரவையை விஸ்தரிக்கும்படி, முதல்வருக்கு நெருக்கடி வலுத்துள்ளது. அவருக்கும் அமைச்சரவையை விஸ்தரிப்பதில், ஆர்வம் இருந்தாலும், பா.ஜ., மேலிடம் இன்னும், 'கிரீன் சிக்னல்' கொடுக்கவில்லை.
ஷிவமொகாவில் நடந்த, பா.ஜ., மாநில செயற்குழு கூட்டம்; அதன் பின், பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்திலும், பலரும் அமைச்சரவையை விஸ்தரித்து, தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி மன்றாடினர்.கர்நாடகாவுக்கு வந்திருந்த, மாநில பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங்கிடம், முதல்வர் எடியூரப்பா, சூழ்நிலையை விவரித்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வாய்ப்பளிக்கும்படி கோரினார். அருண் சிங்கும், இதுபற்றி மேலிட தலைவர்களுடன் பேசுவதாக, உறுதியளித்தார்.
கர்நாடகாவின் நிலவரங்கள் தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அருண் சிங் விவாதிப்பார். வரும், 15ல் அமித் ஷா, கர்நாடகாவுக்கு வருகிறார். அப்போது அமைச்சரவை விஸ்தரிக்க வேண்டிய அவசியத்தை, முதல்வர் விவரிக்க திட்டமிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு பின், அமைச்சரவை விஸ்தரிப்புக்கு, தேதி குறிக்கப்படலாம்.இதையறிந்த பலரும், தினமும் முதல்வர் எடியூரப்பாவின், 'காவேரி' இல்லத்துக்கு சென்று, அமைச்சர் பதவிக்காக, துண்டு போட்டு வைக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE