பொது செய்தி

இந்தியா

சொத்து வரியை அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பெங்களூரு: கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரியை அதிகரிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம், சொத்து வரி உயர்வு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நகராட்சிகள், மாநகராட்சிகள் போல, கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், சொத்து வரியை அதிகரிக்க, அரசு முடிவு

பெங்களூரு: கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரியை அதிகரிக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம், சொத்து வரி உயர்வு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகள், மாநகராட்சிகள் போல, கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், சொத்து வரியை அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடக கிராம சுவராஜ் மற்றும் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, சொத்து வரியை உயர்த்த வேண்டும். சில கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே, குறிப்பிட்ட காலத்தில் சொத்து வரியை அதிகரிக்கின்றன.

பெரும்பாலான பஞ்சாயத்துகள், சொத்து வரியை அதிகரிப்பதில், ஆர்வம் காண்பிக்கவில்லை; வரி வசூல் குறைந்துள்ளது. 2020ல் கிராம பஞ்சாயத்துகள், 666 கோடி ரூபாய், வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தன. ஆனால், கொரோனா காரணமாக, வெறும், 248 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது.கொரோனா ஊரடங்கால், மாநில அரசும் கூட, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இம்முறை கிராம பஞ்சாயத்துகளுக்கு, நிதியுதவி வழங்கும் நிலையில், அரசு இல்லை. எனவே பஞ்சாயத்துகளே, வருவாய் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலையில், கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரியை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உத்தரவிடும் பொறுப்பை, சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 91 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது.

இந்த துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பல சொத்துகள், வரி எல்லைக்குள் கொண்டு வரவில்லை. பொது மக்களும் நிர்ணயித்த அளவில் வரி செலுத்தாமல் குறைவாக செலுத்துகின்றனர். பெரிய பங்களா கட்டியவர்களும் கூட, பழைய வீட்டின் வரியை செலுத்துகின்றனர்.இது போன்ற பல காரணங்களால், பஞ்சாயத்துகளுக்கு எதிர்ப்பார்த்த வருவாய் கிடைப்பதில்லை. இதனால் சொத்து வரியை உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X