பெங்களூரு : "கொரோனா தொற்றுக்கு, தடுப்பு மருந்து வந்துள்ளது. அனைத்து இடங்களிலும், சோதனை நடக்கிறது. இனி முக கவசம் எதற்காக என, பொது மக்கள் நினைக்கக்கூடாது. தடுப்பு மருந்து போட்டுக்கொண்டலும், கொரோனா விதிமுறைகளை, கட்டாயமாக பின்பற்ற வேண்டும்," என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனாவுக்கு, 'பிளாஸ்மா தெரபி' எனப்படும் ரத்த மாற்று சிகிச்சையளிப்பதில், முன்னணியில் உள்ள, டாக்டர் விஷால் கூறியதாவது:அவசர சிகிச்சைக்கு, கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்த, அனுமதி கிடைத்துள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமே தவிர, பரவுவதை தடுக்க முடியாது. எனவே, தடுப்பு மருந்து போட்டுக்கொண்டாலும், கட்டாயமாக, முக கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட நபரிடமிருந்து, புதுவிதமாக தொற்று பரவினால், தற்போதைய சூழ்நிலையை விட, அபாயகரமான நிலையை, எதிர்க்கொள்ள வேண்டி வரும்.
இது தொடர்பாக, விஞ்ஞான ஆய்வு நடந்துள்ளது. இதன்படி, ஒரு நபர், தடுப்பு மருந்து போட்டுக்கொண்டால், அது அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கால அவகாசம் தேவைப்படும்.இந்நபர் தும்மினால், இருமினால், தொற்று மற்றவருக்கு பரவும். அருகில் உள்ளவருக்கு, தொற்று பரவாத வகையில், வேலை செய்யாது. தடுப்பு மருந்து போட்டுக்கொண்டவராலும், புதுவிதமான தொற்று பரவும்; உயிர் போகும் அபாயமும் உள்ளது.இதை மனதில் கொண்டு, கொரோனா தொற்று இல்லாத சமுதாயம் உருவாகும் வரை, முக கவசம் பயன்படுத்துங்கள். சமூக விலகலை பின்பற்றி, மக்கள் தங்களின் உடல்நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE