ஏற்கனவே, மூன்று வகையாக பிரிக்கப்பட்டது, சர்க்கரை நோய். டைப் - 1, டைப் - 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு என்று அந்த மூன்று வகைக்கு அப்பால், தற்போது ஆறு துணை வகை சர்க்கரை நோய் நிலைகளை மருத்துவர்கள் பிரித்தறிந்துள்ளனர்.
இது கேட்பதற்கு குழப்பத்தை தருவதுபோலத் தோன்றலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை முறைகளை மேலும் துல்லியப்படுத்தி, சிகிச்சை தர, இது மிகவும் உதவும் என, சர்க்கரை நோய் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆறு புதிய பிரிவுகளும், 'டைப் - 2' சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலைகள் என, 'நேச்சர் மெடிசின்' ஆய்விதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
'டைப் - 2' வகை சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையாக வகுக்கப்பட்டுள்ளவற்றில், 1, 2 மற்றும் 4 ஆகிய நிலைகளில் உள்ளோருக் குடைப் - 2 ரக சர்க்கரை நோய் வராமலேயே தாக்குப்பிடிப்பர்.
அதே சமயம், 3, 5 மற்றும் 6 ஆகிய நிலைகளில் உள்ளோருக்கு தீவிர டைப் - 2 ரக சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் ஆராய்ச்சியாளர்கள், அக்கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE