பொது செய்தி

இந்தியா

டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி துவங்கியது.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (ஜன.,08) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு,
Farmers, TractorRally, FarmLaws, டில்லி, விவசாயிகள், டிராக்டர் பேரணி, வேளாண் சட்டம்

புதுடில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி துவங்கியது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (ஜன.,08) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு, மேற்கு டில்லி உள்பட டில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியானாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‛ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது.' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜன-202121:26:16 IST Report Abuse
vbs manian தங்களை அழித்து கொண்டு நாட்டையும் பலவீன படுத்துகிறார்கள். இலவச மின்சாரம் உரம் தண்ணீர் இன்னும் என்ன வேண்டும்.அரசாங்கத்தின் முதுகு மேல் சவாரி செய்து எவ்வளவு நாள் காலம் தள்ள முடியும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஜன-202120:12:15 IST Report Abuse
Vena Suna ஏழை விவசாயிகளிடம் நன்றாக விளக்கினால் அவர்கள் இவர்களை பார்த்து கொள்வார்கள் அன்போடு.
Rate this:
Mayilcity Ragu Raman - Mayiladuthurai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-202112:45:44 IST Report Abuse
Mayilcity Ragu Ramanமோடி வேண்டாம் உமது புது ரெகுலேஷன்...
Rate this:
Cancel
S.F. Nadar - chennai ,இந்தியா
07-ஜன-202119:36:20 IST Report Abuse
S.F. Nadar விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏன் நிறைவேற்ற கூடாது ?? ...இவ்வளவு கல் மனசா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X