புதுடில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி துவங்கியது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (ஜன.,08) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு, மேற்கு டில்லி உள்பட டில்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியானாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‛ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது.' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE