வன்முறையால் அதிருப்தி: வெள்ளை மாளிகை அதிகாரிகள் ராஜினாமா

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கும், வன்முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.வெள்ளை மாளிகையில் தொலைதொடர்பு துறையின் முன்னாள் இயக்குநராகவும், அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் செயலாளர் மற்றும் தலைமை அதிகாரியுமான ஸ்டெபானே கிரிஷம் தனது பதவியை ராஜினாமா
uscapitol, வெள்ளைமாளிகை, அதிகாரிகள், ராஜினாமா,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கும், வன்முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் தொலைதொடர்பு துறையின் முன்னாள் இயக்குநராகவும், அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் செயலாளர் மற்றும் தலைமை அதிகாரியுமான ஸ்டெபானே கிரிஷம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை சோஷியல் செகரட்டரியாக பணிபுரிந்த அன்ன கிறிஸ்டினா நிகெடாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருவரும் டிரம்ப் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளது.


latest tamil newsவெள்ளை மாளிகையில் பத்திரிகைத்துறை உதவியாளராக இருந்த சாராக் மேத்யூசும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. நமது நாட்டில், அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ வேண்டும் என பதவி விலகிய பின்னர், வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் சிலர், டிரம்ப்பின் நடவடிக்கை காரணமாக அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஜன-202122:33:42 IST Report Abuse
S.Ganesan இப்படி எல்லாம் நடத்துவதற்குத்தான் டிரம்ப் திமுக உறுப்பினர் அட்டை வாங்கினாரா ?
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
07-ஜன-202115:38:40 IST Report Abuse
Svs yaadum oore //....ஜாதிமதம் பற்றி இங்கு எதற்கு பேசவேண்டும் ....//....அமெரிக்காவில் இப்போது நடக்கும் பிரச்சனைக்கு மதம் காரணம் இல்லை என்று யார் சொன்னது ..அடிப்படையே அதுதான் ..அமெரிக்காவில் ஒரு இனம் மக்கள் தொகையில் 13 சதம் ...ஆனால் அதே இனம் அங்குள்ள சிறைகளை 40 சதம் நிரப்புது ...அதற்கு காரணம் என்ன ?? ..அங்கு ஒரு மாநிலத்தில் , ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வேற்று மதத்தை அல்லது வேறு பிரிவை சேர்ந்தவர்களிடம் வர்த்தக வியாபார தொடர்புகள் கொள்ள மறுக்கலாம் என்று சட்டம் நிறைவேற்றினார்கள் ....அதற்கு ஆதரவு தந்தவன் எந்த உயர்ந்த பதவியில் உள்ளான்?? ....
Rate this:
Cancel
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
07-ஜன-202113:36:23 IST Report Abuse
தமிழன் உளறாதே . இங்கே சாதிவெறி எங்கே? கிருத்தவன் எந்த கொள்கைக்கும் மாறி விடலாம். நீ என்றும் சூத்திரன் தான் பிராமணனாக மாற முடியுமா? பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிருத்துவத்தில் எங்கேயாவது உள்ளதா?
Rate this:
Svs yaadum oore - chennai,இந்தியா
07-ஜன-202114:16:45 IST Report Abuse
Svs yaadum ooreWhile Christianity was used to harness the “savage” natures of Blacks and Native Americans, American history has shown that it was never intended to empower and enfranchise them as fellow Christians or citizens....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜன-202114:31:57 IST Report Abuse
தமிழவேல் பிறப்பால் எழுதப்படாத, ஏற்றத்தாழ்வு கிருத்துவத்திலும் உள்ளது, அதுவும் இந்து மதத்தில் மாறிவருவதுபோலவே மாறிவருகின்றது... ஆனாலும், ஜாதிமதம் பற்றி இங்கு எதற்கு பேசவேண்டும் என்று தெரியவில்லை......
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஜன-202116:42:34 IST Report Abuse
Endrum Indianகிறித்துவர்கள் எஸ் சி/ எஸ் டி கிறித்துவர்களுடன் திருமண தொடர்பு கிடையாது கத்தோலிக்கம் பெந்தகோஸ்ட் சண்டை ஜெகோபைட் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் சண்டை இவர்கள் எல்லாம் ஜாதி வெறியர்கள் அல்லவே அல்ல அப்படித்தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X