வேலூர்: வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்குறுதியளித்தார்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், வரும் சட்டசபை தேர்தலுக்காக இப்போது இருந்தே பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது சில வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தையும் கூறினார். இதற்கு பலர் ஆதரவு கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காட்பாடி, அணைகட்டு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காட்பாடியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.

பின்னர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசுகையில், ‛மக்கள் நீதி மையத்தின் வளர்ச்சியை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்துபோய் பார்க்கின்றனர். தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்படும்,' என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE