கோவை: கோவை சுந்தராபுரம் தினசரி மார்க்கெட்டில் உள்ள வரிவசூல் மையத்தில் 97வது வார்டின் பில் கலெக்டராக கவுஸ்மொய்தீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சுந்தராபுரம் 97வது வார்டில் வசித்து வரும் செந்தில் குமாரிடம், விதிமீறி கட்டடம் கட்டியதற்காக ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகை வசூலிப்பதற்காக செந்தில்குமார், கவுஸ்மொய்தீன் இடையே பேரம் நடைபெற்றுள்ளது. இதில், ரூ.5 ஆயிரத்திற்கு மட்டும் அபராதமாக மாற்றி ரசீது கொடுத்துள்ளார். இதற்காக செந்தில்குமாரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சமாகவும் கேட்டுள்ளார்.
இது குறித்து செந்தில்குமார், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தரவே, அவர்கள் உதவியுடன் ரூ.18 ஆயிரம் லஞ்சப்பணமும், ரூ.5 ஆயிரம் ரசீது பணமும் ரசாயனம் தடவப்பட்டு, கவுஸ்மொய்தீனிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பணத்தை பெறுவதற்காக மதுக்கரை அருகேயுள்ள ஓட்டலுக்கு கவுஸ்மொய்தீனும், அவரது உதவியாளர் தனபாலும் வந்தபோது, டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE