வாஷிங்டன்: அமெரிக்க தலைவர் வாஷிங்டன்னில் வன்முறையில் ஈடுபட்டவர்களை, தேசபக்திமிக்கவர்கள் என, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டுவிட்டரில் புகழ்ந்தார். ஆனால், பலத்த எதிர்ப்பை தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். இருப்பினும், அதற்கு முன் சமூக வலைதளவாசிகள், அந்த பதிவை புகைப்படம் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அந்நாட்டு பார்லிமென்டிற்குள் நுழைந்து அத்துமீறியதுடன், தலைநகரிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்போது டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், போலீசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்கள் நமது நாட்டின் பக்கம் உள்ளனர். பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்திருந்தார்.
இதனை ரீடுவீட் செய்து அவரது மகள் இவாங்கா, பதிவிட்டதாவது: 'அமெரிக்க தேசபக்தியாளர்கள், பாதுகாப்பை மீறுவதை ஏற்க முடியாது; வன்முறைகளை நிறுத்த வேண்டும்' என, அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த பதிவை இவாங்கா உடனடியாக நீக்கினார். இருப்பினும், சமூக வலைதளவாசிகள் சிலர், இவாங்காவின் டுவிட் பதிவை புகைப்படம் எடுத்து சமூக வலைளதங்களில் பரப்பி வருகின்றனர்.
அந்நாட்டு நிருபர் ஒருவர், ''அந்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி, வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசபக்தர்கள் என சொல்கின்றீர்களா?'' என இவாங்காவிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்க பதிலளித்த இவாங்கா, ''இல்லை. அமைதியான போராட்டம் நடத்துபவர்களே தேசபக்தர்கள். வன்முறையை ஏற்று கொள்ள முடியாதது. அவை கடும் கண்டனத்திற்குரியவை. '' என தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறையை தொடர்ந்து, டிரம்ப்பின் சமூக வலைதள பக்கங்களை டுவிட்டர், பேஸ்புக் தற்காலிகமாக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE