மதுரை : சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு மதுரை மற்றும் காரைக்குடி வழியாக இரு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.இந்த இரு ரயில்களும் சென்னை எழும்பூரிலிருந்து 15 நிமிட இடைவெளியில் புறப்படுவதால் பயணிகளுக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன.
எனவே சென்னை எழும்பூர் - மதுரை -செங்கோட்டை சிறப்பு ரயில்(02661), செங்கோட்டை - மதுரை - சென்னை சிறப்பு ரயில் (02662), சென்னை எழும்பூர் -காரைக்குடி-செங்கோட்டை சிறப்பு ரயில் (06181), செங்கோட்டை - காரைக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்(06182)என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் - மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில்கள்(02661/02662) தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜ பாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் - காரைக்குடி - செங்கோட்டை சிறப்பு ரயில்கள் (06181/06182) தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை, கடையநல்லுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE